Preview:  

Track Name:  

Kadaisi Thotta

Featuring Artists:  

Ratty Adhiththan

Produced By:  

Krish Music

Available On :

Itunes Link for Kadaisi Thotta – Ratty Adhiththan Lyrics
Googleplay Link for Kadaisi Thotta – Ratty Adhiththan Lyrics
Amazon Link for Kadaisi Thotta – Ratty Adhiththan Lyrics
Applemusic Link for Kadaisi Thotta – Ratty Adhiththan Lyrics
Amazonmusic Link for Kadaisi Thotta – Ratty Adhiththan Lyrics
Youtube Link for Kadaisi Thotta – Ratty Adhiththan Lyrics
Spotify Link for Kadaisi Thotta – Ratty Adhiththan Lyrics
Deezer Link for Kadaisi Thotta – Ratty Adhiththan Lyrics
Tidal Link for Kadaisi Thotta – Ratty Adhiththan Lyrics
Yandex Link for Kadaisi Thotta – Ratty Adhiththan Lyrics

கடைசி தோட்டா மச்சி நீ உள்ளவா,
கடைசி தோட்டா மச்சி நீ உள்ளவா,
கடைசி தோட்டா மச்சி நீ உள்ளவா,
ஆழ்கடல் ஆர்ப்பரிக்கும் பொங்கும் கேள்வி சொல்லவா
கரையும் காலங்கள் கண்களின் முன்னே தாவும் போது,
கருணை துளியில்லை ஓட்டம் நடை வாழ்க்கை இது,
துண்டு விழுந்தாலும் தட்டிவிட காக்கைக் குஞ்சு, களத்தில் ஒன்றுமில்லை கலப்படம் இது,
என் அனுபவம் அரசாளும் எதிர்காலத்தினை,
உன் ஏட்டு கவிதை காத்து கருப்பு பலன் தரவில்லை,
தன் வழியினை மறந்தவன் மறைகிற சூரியன் வரங்களை கொடுத்தது வழியில பூத்தது இஷ்டப்பட்டு ஏற்றுக் கொண்டேன் கக்குது தமிழ்மொழி!

என் வழிகள் தேடினார், என் வழிகள் மெல்லத் தேடினார், வருடம் உருண்டதும் வாடினார் வலை விரித்து புதைகுழி தோண்டுவார்…….
நான் கடந்தது கவர்ந்தது கடல்வரை எல்லை, ஆனாலும் ஆதித்தன் மௌனங்கள் குடிகொண்ட பிள்ளை,
என் பலங்களை விட பலவீனங்கள் தான் உள்ள, இருந்தும் உங்களுக்கு அது புலப்படவில்லை,
தோள் கொடுத்த தோழனா,
யார் எனக்கு பீமனா,
கோன் தொலைத்த சுகங்கள் யாகம் வளர்க்கும் சீடனா,
என் திக்கெற்ற எண்ணங்கள் முப்புரமெரித்த உன்னை,
நான் தளரும் பொழுது தடுக்கும் அம்பலத்தானே துணை,
பொங்குது பொங்க உள்மனம் இங்க சொந்தம் என்ற சேற்றில் அமுங்க முற்பட்டது எங்க
கலை என்னை சீராட்டி கால் நீட்டி தாலாட்டுகின்றாள், நான் பண்ணுடன் இசைக்க பாடல்கள் வடிக்கின்றாள்!

இந்த உலகத்தில் உற்றார் உறவினர் நண்பன் அனைவரும் வியாபாரி நீ எட்டா கனியா இருக்க நினைத்தால் உன்னை மட்டும் காதலி
சத்தம் வேண்டாம் ஒரு யுத்தம் வேண்டாம் வித்தை கொண்டு வியூகம் செய்

திரைகடல் திரவியம்
திரளது பல பணம்
குடியில குடித்தனம்
மத்தியில கலப்படம்
இருக்கிற அனைவரும்
பறக்கிற மனகுணம்
பலம் எது பலவீனம்
அறியாத இருதயம்
சுவர் அரங்கில்லா சித்திரம் அறிவற்ற மனிதரின் மனங்களை அறுவடை செய்தாய்,
பணம் பத்தும் செய்யும் அரசியல் அதிகாரம் ஆட்சிகள் அனைத்தையும் வென்றாய்,
அணை இல்லா குளம் எதற்கு,
அறிவில்லா பலம் எதற்கு,
பகை இல்லா படை எதற்கு,
பணம் சொல்லும் வழி எனக்கு,
பணம் கொண்ட மனிதனின் மனங்களின் நிறங்களின் குணங்களை தருணங்கள் சொல்லும்,
இருப்பதை மறந்தவன் பறப்பதை அனுதினம் அடிக்கடி இருட்டில தேடும்,
இருக்கும் வரைக்கும் இயமன்,
இறந்த பிறகு இறைவன்,
இருண்ட உலகின் தலைவன்,
இரக்கம் வெறுத்த பகைவன்,
தவழும் குழந்தை உனக்கு தரையில் எழுந்து நடக்க ஆசை, தலைவன் எனக்கு கரங்கள் விரித்து வானில் பறக்க ஆசை!
முற்றும்.
-இரத்தி ஆதித்தன்-