Track Name:  

Kicku

Featuring Artists:  

Ratty Adhiththan (feat. New Face)

Produced By:  

M. Kowtham

Available On :

[Rap]
சுட்டெரிக்கிற விழிகளை உடையவள் எனக்கென பிறந்தவள் உனக்கென ஒரு கவிதை,
இளையவனின் இடப்பக்கம் துடிக்கிற இருதயம் ஒருதலை காதலில் பலதடவை,
என் செங்குருதிகள் செயலற்றது மறுபடி உன் கரம் தேடுது காதலி,
இந்த காற்றிலே உன் குழல் ஆடிய தாண்டவம் மீட்டுது இசை என் யாழினி’
பல மொழிகளில் ஒரு கவி,
என் திருமதி,
நான் எழுதிய பாட்டு,
வரைவிலக்கணம் எதுக்கினி,
என் தனித்தொனி,
சுதி மீட்டுது காற்று,
குற்றம் என்ன சுற்றம் என்ன யார் குலத்தில் பேதம் என்ன,
குற்றம் கொண்ட கண்களுக்கு கெட்டவன் நான் மேல சொல்ல,
கண்ணனுக்கு ராதை என காதலுக்கு தூது விட,
என் மனதில் நீ இருக்க உந்தன் விழி நான் அணைக்க,
பார்வையிலே ஏறுது KICKU
அவ பருவம் ஏத்துது மப்பு,
தொட்டால் துகள் ஆகும் இன்பம் அவ இடையில் ஓடுது ஓடுது,
அடங்க மறுத்த காளை அதைவிட ,
அடக்கிப் பிடிச்ச ஜாலம் என்ன சொல்ல,
இரும்ப உருக்கி கோல மேல போல,
இடுப்பில் சொருகி மாட்டிக்கிட்ட புள்ள